​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

Published : Mar 14, 2019 6:30 PM

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

Mar 14, 2019 6:30 PM

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மொழிப்பாட தேர்வுகள் மட்டும், பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது. கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12.45 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறுவதால், பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கான தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.3 ஆயிரத்து 731 மையங்களில், பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்களுடன், 4 திருநங்கைகளும் தேர்வெழுதுகின்றனர்.

காப்பியடிப்பது உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 5 ஆயிரத்து 500 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கியுள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.