​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண்டு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13ம் தேதிக்குள் நடத்த அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவு

Published : Mar 14, 2019 12:41 PM

ஆண்டு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13ம் தேதிக்குள் நடத்த அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவு

Mar 14, 2019 12:41 PM

ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வுகளை ஏப்ரல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில்,பள்ளி கல்வி துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ஒன்று முதல் 5ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13ம் தேதிக்குள்ளும், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள்ளும் மூன்றாம் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தவும், பள்ளி வளாகங்களை வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தவும் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.