​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ராகுல் காந்தி

Published : Mar 13, 2019 5:46 PM



காங்., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ராகுல் காந்தி

Mar 13, 2019 5:46 PM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாகர்கோவிலில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்  நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்றார். தமிழகத்தில் நடைபெறும் அரசை டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் ஆட்டிவைத்து இயக்குவதாக அவர் புகார் கூறினார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் மோடி சிதைத்து வருவதாக ராகுல் குற்றம் சாட்டினார்.  ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க மோடி முயற்சி செய்வதாக கூறிய அவர்,  மோடி எங்கு என்ன வேண்மென்றாலும் செய்யலாம் என்றும்,  தமிழகத்தில் அது நடக்காது, தமிழக மக்கள் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்கமட்டார்கள் என்றும் கூறினார். 

தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கான அத்தனை வளங்களும் ஏராளமாக உள்ளன என்ற அவர்,  இன்று பல கோடி மக்களிடம் உள்ள கைபேசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்னும் நிலையை உருவாக்க தொழில் துறையை மேம்படுத்தி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்படுமென அவர் கூறினார்.

நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச நிச்சயிக்கப்பட்ட வருமானத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும் என்ற அவர், திருவள்ளுவர் கூறியதுபோல் உண்மை வெல்லும் என்றார்.  அந்த உண்மை, ரபேல் விவகாரத்தில் செய்த ஊழலுக்காக மோடியை சிறைக்கு அழைத்துச் செல்லும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.