​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகக் கோப்பையில் ரஹானே விளையாட வேண்டும் - முன்னாள் வீரர் வெங்சர்க்கார்

Published : Mar 12, 2019 8:59 PM

உலகக் கோப்பையில் ரஹானே விளையாட வேண்டும் - முன்னாள் வீரர் வெங்சர்க்கார்

Mar 12, 2019 8:59 PM

அஜிங்கிய ரஹானேவை உலகக் கோப்பையில் சேர்க்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

50 ஓவர் கிரிக்கெட் போட்டியென்பது 20 ஓவர் போட்டிபோல அவசர கதியில் ஆடக்கூடிய ஆட்டம் அல்ல எனத் தெரிவித்த அவர், அனுபவமிக்க வீரரான ரஹானேவை உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், நான்காவது வீரர் மற்றும் துவக்க வீரர் என இரு நிலைகளிலும் ரஹானேவால் சிறப்பாக விளையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.