​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பிர் போட்டி?

Published : Mar 12, 2019 6:49 PM

பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பிர் போட்டி?

Mar 12, 2019 6:49 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பிர், பாஜக சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், வருகிற மக்களவை தேர்தலில் புது டெல்லி தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக அமிர்தசரஸில் வாக்குகள் சேகரித்த அவர், டெல்லியில் இயங்கிவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளையும் தெரிவித்துவருகிறார். இப்படியாக பாஜகவுடன்அவர் நெருக்கம் காட்டிவருவதால் இந்தத் தேர்தலில் அவர் நிச்சயம் பாஜக வேட்பாளராக  களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.