​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர்ரக கார்களின் விலையை 3 சதவீதம் உயர்த்துகிறது டெஸ்லா

Published : Mar 11, 2019 3:29 PM

உயர்ரக கார்களின் விலையை 3 சதவீதம் உயர்த்துகிறது டெஸ்லா

Mar 11, 2019 3:29 PM

டெஸ்லா நிறுவனம் தமது உயர் ரக கார்களுக்கான விலையை உயத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

மாடல் 3 கார்களை 35 ஆயிரம் டாலர்களுக்கு விற்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்பு திட்டமிட்டதை விட குறைவான விற்பனையகங்களை மட்டுமே மூடுவதாகவும், அதிக விற்பனை நடைபெறும் நகரங்களில் குறைந்த பணிக்குழுவோடு விற்பனையகங்களை மீண்டும் இயக்கவுள்ளதாகவும் டெஸ்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாடல் 3, மாடல் எஸ், மாடல் எக்ஸ் கார்களின் உயர் ரக கார்களுக்கு சராசரியாக 3 சதவீத விலையை உயர்த்துவதாக டெஸ்லா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.