​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரா கிளைடிங் மூலம் வனப்பகுதியில் இறங்கிய இளைஞரைத் தாக்கிய கங்காரு

Published : Mar 10, 2019 11:19 AM



பாரா கிளைடிங் மூலம் வனப்பகுதியில் இறங்கிய இளைஞரைத் தாக்கிய கங்காரு

Mar 10, 2019 11:19 AM

ஆஸ்திரேலியாவில் பாராசூட் மூலம் தரையிறங்கியவரை கங்காரு தாக்கி காயப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

கான்பெரா அருகே உள்ள வனப்பகுதியில், பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இறங்கு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கங்காரு ஒன்று வேகமாக வந்து அந்த இளைஞரை தாக்கியது.

முன்பக்கக் கால்களால் தாக்கியதில் இளைஞரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.