​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புலித் தோல் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

Published : Mar 10, 2019 11:18 AM

புலித் தோல் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

Mar 10, 2019 11:18 AM

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில், புலித்தோலை விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்கச் சென்ற மத்திய வனத்துறையினருக்கு கத்தி வெட்டு விழுந்தது. புலித்தோலை விற்பனை செய்யும் கும்பலை மத்திய வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்களை அணுகி புலித்தோலை 4 லட்சம் ரூபாய்க்கு வாங்க பேரம் பேசுவது போல் நடித்துள்ளனர்.

இதன்படி வத்தலக்குண்டு புறவழிச் சாலையில் காரில் வந்த 3 பேர் கும்பல், புலித்தோலை எடுத்து கொடுக்க முயன்றது. அப்போது வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். சுதாரித்துக் கொண்ட கும்பல், கத்தியால் வனத்துறையினரை வெட்டி விட்டு தப்பியது.

அதில் இருவர் பிடிபட்டனர். வத்தலக்குண்டு போலீசில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். வெட்டுப்பட்ட வனத்துறை ஊழியர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.