​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொன்ற மகன்

Published : Mar 09, 2019 10:47 AM

அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொன்ற மகன்

Mar 09, 2019 10:47 AM

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே இளைஞர் ஒருவர் குடிபோதையில், அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜிலியம்பாறை, பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியும் இவர், குடிபோதையில் தன்னுடைய உறவினரிடம் தகராறு செய்துள்ளார். இதை வினோத்தின் பெற்றோர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை செல்வராஜின் தலையில்  தாக்கியதுடன், தனது தாயையும் கத்தியால் குத்தினார்.

தலையில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாய் மகாலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தையை கொலை செய்த வினோத்தை போலீசார் கைது செய்தனர்.