​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரும் கல்வியாண்டில் எட்டு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது

Published : Mar 09, 2019 9:04 AM

வரும் கல்வியாண்டில் எட்டு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது

Mar 09, 2019 9:04 AM

வரும் கல்வியாண்டில் எட்டு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக அறிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அமைக்கும் வகையிலும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி, 2018-19ல் 1,6,9, 11 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-20ல் 2,7,10,12 ஆகிய வகுப்புகளுக்கும் 2020-21ல் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் நான்கு வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

வரும் கல்வியாண்டிற்கான 2, 7, 10, 12-ம் வகுப்பு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தையும் வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் பாடப்புத்தகங்கள் தயாராகிவிடும் என்றும், 2 பருவங்களுக்கான குறுந்தகடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மாற்றும்போது 2 அல்லது 3 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், 8 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை ஒரே ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்துவது குறிப்பிடத்தக்கது.