​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு எழுத அண்டை மாநிலங்களுக்கு செல்ல அவசியமில்லை - செங்கோட்டையன்

Published : Mar 08, 2019 4:15 PM

நீட் தேர்வு எழுத அண்டை மாநிலங்களுக்கு செல்ல அவசியமில்லை - செங்கோட்டையன்

Mar 08, 2019 4:15 PM

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத அண்டை மாநிலங்களுக்கு செல்ல அவசியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு தமிழகத்திலேயே நீட் தேர்வை எழுதும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கொண்டு வந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்ற அவர், பல்வேறு மொழி பேசுவோர் அந்தந்த மொழியிலேயே வினாத்தாள் அமைய வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். டெட் தேர்வு தேதிகளை ஒரு வாரத்தில் அறிவிக்க பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.