​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் புதிதாக 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள்..!

Published : Mar 07, 2019 4:56 PM

தமிழகத்தில் புதிதாக 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள்..!

Mar 07, 2019 4:56 PM

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் உள்பட நாட்டில் மொத்தம் 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை புதிதாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் கட்டப்பட்டு, முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், மத்திய பாடத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

புதிதாக அமைய உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4 தமிழகத்தில் அமையவுள்ளன. கோவை மாவட்டம் கிட்டம்பாளையத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வளாகத்திலும், மதுரை மாவட்டம் இடையாப்பட்டியில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் வளாகத்திலும் இப் பள்ளிகள் அமைகின்றன. அதேபோல், சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வளாகத்திலும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையிலும் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.