​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ, தனது நெஞ்சிலும் எரிகிறது - பிரதமர் மோடி

Published : Feb 17, 2019 4:09 PM



மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ, தனது நெஞ்சிலும் எரிகிறது - பிரதமர் மோடி

Feb 17, 2019 4:09 PM

புல்வாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக மக்கள் நெஞ்சங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீ, தனது நெஞ்சிலும் எரிவதாக பிரதமர் நரேந்திரமோடி ஆவேசப்பட்டுள்ளார்.

பாட்னா மெட்ரோ ரயில், அம்மோனியா - யூரியா வளாகம், பாட்னா முதல் முசாபர்பூர் வரை எல்.பி.ஜி. வாயு குழாய் விரிவாக்கம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.

[``இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாக்கூர் ஆகியோரை நினைவு கூர்ந்தார். வீரர்களுக்கு தலைவணங்குவதாக தெரிவித்த மோடி, கூடி இருக்கும் மக்களின் நெஞ்சங்களில் பற்றி எரியும் தீ , தனது நெஞ்சிலும் எரிந்து கொண்டிருப்பதாக ஆவேசத்துடன் கூறினார்.

 

இதை அடுத்து ஜார்கண்ட் மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, ஹசாரிபாஃக் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். ஹசாரிபாஃக், டும்கா, பலாமு ((Hazaribagh, Dumka and Palamu)) ஆகிய நகரங்களில் 3 மருத்துவமனைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியவர்களுக்கு அதற்கான சாவிகளைக் கொடுத்தார்.

பின்னர் பேசிய மோடி, அடிப்படை வசதிகளைக் கூட பெறுவதில் தடையை சந்திக்கும் மக்களின் அந்தஸ்தை உயர்த்துவது தான் தங்களின் லட்சியம் எனத் தெரிவித்தார்.