​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published : Feb 17, 2019 2:14 PM



தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Feb 17, 2019 2:14 PM

தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்காவது போலீஸ் துணை இல்லாமல் முதலமைச்சரால் செல்ல முடியுமா? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை அவர் வாழ்த்தினார். தமிழகத்தில் பலவந்தம், மிரட்டல் மூலம் ஒரு கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார். கொடநாடு விவகாரம், வருமான வரி சோதனை, குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்டவற்றை வைத்து மிரட்டி கூட்டணி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தன்னால் தனி ஆளாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்றும், தன்னை யார் என்று மக்களுக்கு தெரியும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் போலீஸ் துணை இல்லாமல் முதலமைச்சரால் சொந்த தொகுதிக்கு செல்ல முடியுமா என்று பந்தயம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.