​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீரமரணமடைந்த இருவரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவு

Published : Feb 16, 2019 12:48 PM

வீரமரணமடைந்த இருவரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவு

Feb 16, 2019 12:48 PM

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம்,  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்,  அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இருவரின் குடும்பங்களுக்கு தலா இருபது  லட்சம் ரூபாய்  உடனடியாக  வழங்க ஏற்கெனவே உத்தரவிட்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வீரமரணமடைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.