​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
400-ஆண்டுகள் பழமையான மீன்பிடித்திருவிழா

Published : Feb 16, 2019 11:38 AM

400-ஆண்டுகள் பழமையான மீன்பிடித்திருவிழா

Feb 16, 2019 11:38 AM

மதுரை மேலூர் அருகே 400-ஆண்டுகள் பழமையான மீன்பிடித்திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் மீன்பிடித்துச் சென்றனர். மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாய் சோழப்பேரேரி என முந்தைய காலத்தில் அழைக்கப்பெற்றது.

இங்கு மீன்பிடித் திருவிழாவுக்காக சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நள்ளிரவு முதலே வாகனங்களில் வந்து குவிந்தனர். இரவு கண்மாய் அருகிலேயே தங்கி, விடிந்ததும் ஆரவாரத்துடன் மீன்பிடித்தனர்.

புண்ணிய ஸ்தலமான திருவாதவூர் கண்மாயில் மீன்பிடித்து தங்களது இல்லங்களில் பூஜை செய்து கடவுளுக்கு படைப்பதால் விவசாயம் செழித்து நலமான வாழ்வு கிடைக்கும் என தங்களின் முன்னோர்களின் வழியில் இன்றும் இந்த மீன்பிடித்திருவிழாவில் பங்கேற்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்த மீன் பிடித்திருவிழாவை ரசிப்பதற்க்காகவும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் குடும்பங்களுடன் வந்து செல்கின்றனர் .இந்தாண்டு கண்மாய் நன்கு நிரம்பியதால் இதுவரை இல்லாத அளவிற்கு 4-கிலோ எடை வரை உள்ள மீன்களும் அதிக அளவில் வலைகளில் சிக்கியது.