​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் இருந்து 700 கோடி ரூபாய் செலவில் எந்திர துப்பாக்கி வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

Published : Feb 12, 2019 7:16 PM

அமெரிக்காவில் இருந்து 700 கோடி ரூபாய் செலவில் எந்திர துப்பாக்கி வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

Feb 12, 2019 7:16 PM

அமெரிக்காவில் இருந்து 700 கோடி ரூபாய் செலவில் எந்திர துப்பாக்கி வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திட்டுள்ளது. ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டமாக 72,400 எந்திர துப்பாக்கிகள் வாங்க உள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.சிக் சாசர் ரக எந்திர துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து விரைவான கொள்முதல் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து ஓராண்டுக்குள் துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சிக் சாசர் எந்திர துப்பாக்கியை தான் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாட்டின் ராணுவத்தினர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.