​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய தூதரகங்களில் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு கேள்வி

Published : Feb 12, 2019 7:06 PM

இந்திய தூதரகங்களில் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு கேள்வி

Feb 12, 2019 7:06 PM

இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 21ம் தேதி ரஷ்யா அருகே ஏற்பட்ட கப்பல் தீவிபத்தில், கப்பலில் பயணம் செய்த 4 இந்தியர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை மீட்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ,வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு இந்திய கடற்பரப்பில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, வெளிநாடுகளில் இருப்போருக்கு சட்ட உதவிகள் இந்திய அரசால் வழங்கப்படுகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இது குறித்து விரிவாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு மார்ச் 04ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். மேலும் 4 பேரின் மீட்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 14ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.