​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் நடைபெற்ற அரியவகை கடல்வாழ் உயிரிணங்கள் தொடர்பான கண்காட்சி

Published : Feb 12, 2019 7:01 PM

தூத்துக்குடியில் நடைபெற்ற அரியவகை கடல்வாழ் உயிரிணங்கள் தொடர்பான கண்காட்சி

Feb 12, 2019 7:01 PM

தூத்துக்குடியில் நடைபெற்ற கடல்வாழ் உயிரின கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டுச் சென்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வசிக்கும் ஏராளமான அரியவகை கடல் உயிரினங்களைப் பாதுகாக்க, பொதுமக்களிடையே அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், காமராஜ் கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கியது.

இதில் அரியவகை உயிரினங்களான கடல் ஆமை, கடல் அட்டை, பவளப்பாறைகள், வண்ண மீன்கள், சிப்பி வகைகள், கடல் பாசி, சங்கு, பதப்படுத்தப்பட்ட அரியவகை மீன்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், கடல்பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாகவும், ஆழ்கடல் நீச்சல் தொடர்பான விளக்கங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.