​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹஜ் பயணத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்

Published : Feb 12, 2019 6:56 PM

ஹஜ் பயணத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்

Feb 12, 2019 6:56 PM

தமிழகத்திற்கு கூடுதலாக 1500 ஹஜ் பயணிகளுக்கு ஒதுக்கீட்டு இடங்களை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், 2019 ஆண்டு ஹஜ் பயணத்திற்காக தமிழகத்திற்கு 3534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஏற்கனவே 6379 விண்ணப்பங்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் நலன்கருதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 1500 இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தை பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.