நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செலமகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முதியவர் பூசன், தனியாக வசித்து வந்த நிலையில், காலை கட்டிலில் சடலமாகக் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
வாயில் துணி திணிக்கப்பட்டு நெற்றி, கழுத்தில் வெட்டப்பட்டு பூசன் கொல்லப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீசார் பூசனின் சடலத்தை மீட்டனர். அவரது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, கோழிகள், இருசக்கர வாகனம் ஆகியவை மாயமாகி இருந்தன. எனவே கொள்ளையின் போது கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.