​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிச் சுற்றுச்சுவரில் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும் ரயில் ஓவியம்

Published : Feb 12, 2019 6:43 PM

பள்ளிச் சுற்றுச்சுவரில் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும் ரயில் ஓவியம்

Feb 12, 2019 6:43 PM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசு தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவரில் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும் ரயில் ஓவியம் காண்போரின் கண்களை கவர்ந்து வருகிறது.

ஆழ்வார்த்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்க்கன்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கிவருகிறது. பள்ளிக் கட்டிட சுவர்களில் குழந்தைகளை உற்சாகப்படுத்த விலங்குகள், பூக்கள், பறவைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார்போல், பள்ளிச் சுற்றுச்சுவரில் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும் ரயில்வண்டி ஓவியம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தொலைவில் இருந்து பார்த்தால், உண்மையான ரயில் ஒன்று நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவ்வழியாக சாலையில் செல்பவர்கள் சுவற்றின் முன் நின்று தற்படம் எடுத்துச் செல்கின்றனர்.