தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிக்குச் சென்றுவர வனத்துறையினர் அறிவுறுத்தல்
Published : Feb 12, 2019 6:32 PM
தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிக்குச் சென்றுவர வனத்துறையினர் அறிவுறுத்தல்
Feb 12, 2019 6:32 PM
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களுக்கு அருகே 50க்கும் அதிகமான யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் கவனமுடன் வேலைக்குச் சென்றுவருமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளமலை டனல், சின்னகல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, நல்லமுடி காட்சி முனை, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் சுற்றிவருகின்றன.
தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும் காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால், அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே அப்பகுதிக்கு சுற்றுலா வரும் வெளியூர் பயணிகள், யானைகளை பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.