​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம்

Published : Feb 12, 2019 3:28 PM

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம்

Feb 12, 2019 3:28 PM

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், கால்நடைக்கான தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும், சத்துணவில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.