​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றம்

Published : Feb 12, 2019 6:43 AM

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றம்

Feb 12, 2019 6:43 AM

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

நிதியமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். மக்களவையில் நேற்று விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிதி மசோதா நிறைவேற்றியது. தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

முந்தைய அரசின் நடைமுறைகளை மாற்றி, நேர்மையாகச் செயல்படும் ஒரு அமைப்பை நோக்கி முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

போலியான நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளையில், நியாயமான நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று பியூஷ் கோயல் உறுதி அளித்தார்.