​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு

Published : Feb 12, 2019 6:19 AM

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு

Feb 12, 2019 6:19 AM

மாசிமாத பூஜைக்காக நடை இன்று திறக்கப்படுவதை ஒட்டி சபரிமலை கோவிலில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி கோவில் நடையை இன்று மாலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும் சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில் எஸ்.பி. அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்.பி. மஞ்சு நாத் தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்.பி. மது தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.