​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரையரங்குகளுக்கு உணவுப் பொருள் எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி

Published : Feb 11, 2019 8:57 PM

திரையரங்குகளுக்கு உணவுப் பொருள் எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி

Feb 11, 2019 8:57 PM

திரையரங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், திரையரங்களுக்கு வெளி உணவுகளை எடுத்து செல்வதை எந்த சட்டமும் தடை செய்யாத நிலையில், வீட்டில் இருந்து உணவுப்பொருட்களை தடுப்பது மனித உரிமை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை வழங்கப்படவில்லை என்றனர். எனவே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.