​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற அகதிகள் 5 பேர் கைது

Published : Feb 11, 2019 7:46 PM

படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற அகதிகள் 5 பேர் கைது

Feb 11, 2019 7:46 PM

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற ஒரு சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 1997ல் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த கிளிநொச்சியைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மதுரை ஆனையூர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்த அவர்கள், ராமநாதபுரம் அடுத்த வழுவூரைச் சேர்ந்த ஆனந்தன் என்ற முகவர் மூலம் படகில் இலங்கை செல்ல முயன்றனர்.

ரெட்டைத்தாளை கடற்கரைப் பகுதியில் படகுக்காக காத்திருந்த அவர்கள் 5 பேரையும் அவ்வழியாக ரோந்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களைக் கைது செய்த போலீசார், முகவர் ஆனந்தனையும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.