​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலுக்கு செல்லும் போது தூண்களில் முட்டி படகுகள் சேதம் என மீனவர்கள் புகார்

Published : Feb 11, 2019 6:54 PM

கடலுக்கு செல்லும் போது தூண்களில் முட்டி படகுகள் சேதம் என மீனவர்கள் புகார்

Feb 11, 2019 6:54 PM

நாகை துறைமுகம் அருகே முழுமையாக அகற்றப்படாத தூண்களால் மீன்பிடி படகுகள் சேதமாகி வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடுவையாற்று நீர் கடலில் கலக்கும் பகுதியில், தங்களது படகுகளை மீனவர்கள் நிறுத்தி வருகின்றனர். இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தூக்கு பாலம், புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டதன் காரணமாக இடிக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் அமைக்கப்பட்ட சில கான்கிரீட் தூண்கள் மட்டும் அகற்றப்படவில்லை.

இதனால் ஆற்றை கடந்து செல்லும் போதெல்லாம் தூண்களில் முட்டி படகுகள் சேதமாகி வருவதாக கூறும் மீனவர்கள்,  தூண்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.