​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில்வே குடியிருப்பில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம்

Published : Feb 11, 2019 6:37 PM

ரயில்வே குடியிருப்பில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம்

Feb 11, 2019 6:37 PM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா, திறந்துவைத்து, அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

மேலும், ரயில்வே ஊழியர்களுக்கான மருத்துவமனையில், வீடீயோ கான்ஃபிரன்ஸ்ஸிங் முறையில் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வசதியை அவர் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு தேவையான கோரிக்கைகளை, செய்தியாளர்கள் முன் வைத்தபோது, அது குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.