​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறுமுகசாமி விசாரணை ஆணைய காலத்தை மேலும் 10 வாரங்கள் நீடிக்க கோரிக்கை

Published : Feb 11, 2019 5:55 PM



ஆறுமுகசாமி விசாரணை ஆணைய காலத்தை மேலும் 10 வாரங்கள் நீடிக்க கோரிக்கை

Feb 11, 2019 5:55 PM

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கான காலத்தை மேலும் 10 வாரங்கள் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடததிவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையை வரும் 24ஆம் தேதி ஆணையத்தில் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆணையத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எந்த உத்தரவும் வராத நிலையில், மேலும் சிலரை விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதால் மேலும் அவகாசம் அரசிடம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே 3முறை ஆணையத்தின் விசாரணை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 4வது முறையாக மேலும் 10வாரம் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. துணை முதல்வர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்களை ஆணையம் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது..