​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாண்டா கரடிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட 8 வயது குழந்தை

Published : Feb 11, 2019 5:47 PM



பாண்டா கரடிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட 8 வயது குழந்தை

Feb 11, 2019 5:47 PM

சீனாவில், பாண்டா கரடிகளிடம் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது.

சீனாவில் உள்ள செங்க்டுவில் 8 வயது குழந்தை ஒன்று பாண்டா கரடிகளின் வசிப்பிடத்திற்குள் எதிர்பாராவிதமாக சிக்கிக் கொண்டது. 3 பாண்டாக்கள் தன்னை சூழ்ந்துகொண்டதை அறிந்த அந்த குழந்தை செய்வதறியாது திகைத்தது.

இந்நிலையில் அங்கிருந்த பாதுகாவலர் துரிதமாக செயல்பட்டு தனது கையைக் கொடுத்து குழந்தையை மேலே தூக்கினார். அதன் பின்னர் அந்தக் குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் இந்தச் சம்பவத்தில் குழந்தையை காப்பாற்றிய பாதுகாவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.