​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸியோமி, ஒன் பிளஸ் நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல் செல்போன்கள் அதிக கதிர்வீச்சுக்களை உமிழ்வது கண்டுபிடிப்பு

Published : Feb 11, 2019 5:37 PM

ஸியோமி, ஒன் பிளஸ் நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல் செல்போன்கள் அதிக கதிர்வீச்சுக்களை உமிழ்வது கண்டுபிடிப்பு

Feb 11, 2019 5:37 PM

ஸியோமி, ஒன் பிளஸ் நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல் செல்போன்கள் அதிக கதிர்வீச்சுக்களை உமிழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகம் ஒரு ஆய்வை நடத்தியது. உமிழும் கதிர்வீச்சில் ஒரு கிலோவுக்கு எத்தனை வாட்ஸ் உள்ளது என்பது கணக்கிடப்பட்டது.

இதன்படி அதிக கதிர்வீச்சுக்களை உமிழும் ஐந்து செல்போன்கள் பட்டியலில் ஸ்யோமி, ஒன் பிளஸ் நிறுவனத்தின் 4 செல்போன்கள் இடம்பிடித்துள்ளன. ஸியோமி Mi A1 தான் மிக அதிக கதிர்வீச்சுகளை உமிழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடங்களில், ஒன் பிளஸ் 5T, ஸியோமி Mi Max 3, மற்றும் ஒன் பிளஸ் 6T ஆகிய செல்போன்கள் உள்ளன.