​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குற்றவழக்கில் சிக்கியவரின் கழுத்தைச் சுற்றி பாம்பை அணிவித்து கொடூர விசாரணை

Published : Feb 11, 2019 5:24 PM

குற்றவழக்கில் சிக்கியவரின் கழுத்தைச் சுற்றி பாம்பை அணிவித்து கொடூர விசாரணை

Feb 11, 2019 5:24 PM

இந்தோனேஷியாவில் குற்றவழக்கில் சிக்கியவரின் கழுத்தைச் சுற்றி பாம்பை வைத்தும் முகத்தில் கடிக்க விடுவது போல் அச்சுறுத்தியும் போலீசார் விசாரணை மேற்கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பப்புவா (Papua) மாகாணத்தில் செல்ஃபோன் திருட்டுகள் தொடர்பான வழக்கில் சிக்கிய நபரிடம் போலீசார் இந்தவகையில் விசாரணை மேற்கொண்டனர்.

வாய்க்குள்ளோ, அல்லது ஆடைகளுக்குள்ளோ பாம்பை விட்டுவிடுவதாக போலீசார் மிரட்டியதையடுத்து 2 முறை செல்ஃபோன் திருடியதாக அந்த நபர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ இணையதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளதோடு தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.