​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Published : Feb 11, 2019 5:24 PM



காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Feb 11, 2019 5:24 PM

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து 2 பேர் உயிரிழந்த வழக்கில், பந்தயத்தில் ஈடுபடுவதற்காக இருசக்கர வாகனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களே தீப்பிடிக்கக் காரணம் என போலீசார் கூறியுள்ளனர்.

செங்கல்பட்டை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவர் நேற்று முன் தினம் இரவு உறவினர்கள் இருவரோடு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புல்லேரி கிராமத்தை அடைந்த போது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்ததாகக் கூறப்படும் இருசக்கர வாகனம், ஹரிகரன் வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கருகின. அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் மலாலிநத்தத்தைச் சேர்ந்த பிரேம் குமார் மற்றும் ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் தீப்பிடித்து எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க், சைலன்சர் ஆகியவை பந்தயந்துக்கு செல்வதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதன் காரணமாகவே மோதிய வேகத்தில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சைலன்சர் வெப்பம் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.