​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் ஒப்பந்தம்: பிரதமரும் உடந்தையாக இருந்ததாக ராகுல் குற்றச்சாட்டு

Published : Feb 11, 2019 5:17 PM

ரபேல் ஒப்பந்தம்: பிரதமரும் உடந்தையாக இருந்ததாக ராகுல் குற்றச்சாட்டு

Feb 11, 2019 5:17 PM

ஒவ்வொரு பாதுகாப்பு துறை ஒப்பந்தத்திலும் இடம்பெறும் ஊழல் தடுப்புக்கான பிரிவுகள் ரஃபேல் ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்,  பிரதமரும் உடந்தை என்பதையே காட்டுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்புக்கான பிரிவுகள், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசால் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முறையற்ற செல்வாக்கை பயன்படுத்துவது, ஏஜெண்ட் அல்லது ஏஜென்சிக்கு  கமிஷன் போன்றவற்றை தடுப்பது மற்றும் அத்தகைய செயல்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான பிரிவுகளை, சப்ளை புரோட்டாகால் எனப்படும் விநியோக நெறிமுறைகளில் இருந்து அரசு நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் மூலம் நடைபெற்றுள்ள கொள்ளைக்கு பிரதமரும் உடந்தை என குற்றம்சாட்டியுள்ளார்.