​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலவச மின் இணைப்பிற்கு ரூ10000 லஞ்சம் கேட்டவர் கைது

Published : Feb 11, 2019 4:25 PM



இலவச மின் இணைப்பிற்கு ரூ10000 லஞ்சம் கேட்டவர் கைது

Feb 11, 2019 4:25 PM

திருவண்ணாமலை அருகே, பழங்குடி இனத்தவருக்கு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடி இன விவசாயி சின்னப்பையன். இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க,அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் தசரதனுக்கு உத்தரவிட்டனர். நிலத்தை நேரில் ஆய்வு செய்த தசரதன், மின் இணைப்பு கொடுப்பதற்கு, சின்னப்பையனிடம் ரூ10000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, சின்னப்பையன் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் தகவல் அளித்துள்ளார்.

பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், விவசாயி சின்னப்பையன் 7500 ரூபாயை கொடுக்கும் போது, அதனை வாங்கிய தசரதனை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், கையும் களவுமாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.