​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முல்லை பெரியாரில் மாற்று அணை அமைக்கும் விவகாரத்தில் தகவல்களை திரட்ட கேரளாவுக்கு அனுமதி

Published : Feb 11, 2019 4:14 PM



முல்லை பெரியாரில் மாற்று அணை அமைக்கும் விவகாரத்தில் தகவல்களை திரட்ட கேரளாவுக்கு அனுமதி

Feb 11, 2019 4:14 PM

முல்லை பெரியாரில் மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்ட கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான நிபுணர் குழு ஆய்வுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. அதற்கு எதிரான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு மனுவில் அணை பாதுகாப்பாக இருப்பதாக ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அணை தொடர்பாக வீண் புரளிகளை உருவாக்கி கேரள அரசு அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அணையைக் கட்ட கேரள அரசு ஆரம்ப கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது முல்லை பெரியாறு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேரள அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் முல்லை பெரியாரில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் மாற்று அணை அமைப்பதற்கான தகவலை மட்டுமே திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று தகவல்களை திரட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.