​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Published : Feb 11, 2019 3:56 PM



எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Feb 11, 2019 3:56 PM

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் - காந்தி மண்டபம் இடையே பாலம் கட்ட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்து, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.