​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரண்டு சிக்சர்களை அடித்த முதல்வர், நிச்சயமாக ஹாட்ரிக் சிக்சரும் அடிப்பார் - MLA செம்மலை

Published : Feb 11, 2019 3:43 PM



இரண்டு சிக்சர்களை அடித்த முதல்வர், நிச்சயமாக ஹாட்ரிக் சிக்சரும் அடிப்பார் - MLA செம்மலை

Feb 11, 2019 3:43 PM

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கி முதல் சிக்சர் அடித்த முதல்வர், தற்போது ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய்  சிறப்பு நிதி வழங்கி 2வது சிக்சர் அடித்துள்ளதாகவும், அடுத்ததாக ஹாட்ரிக் சிக்சரை நிச்சயமாக முதல்வர் அடிப்பார் என்றும் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய செம்மலை, தேர்தலை கருத்தில் கொள்ளாமல் தமிழகத்தின் எதிர்கால நிதி நிலையை கருத்தில் கொண்டு சிறப்பாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு வழங்காத நிலையில், நிதி சுமையிலும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.