​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் முளைப்பு கண்டுள்ளதாகப் புகார்

Published : Feb 11, 2019 3:43 PM



பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் முளைப்பு கண்டுள்ளதாகப் புகார்

Feb 11, 2019 3:43 PM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டி, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேல்மங்களத்தில் இயங்கி வரும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் இரு தினங்களாக பெய்த சாரல் மழையில் நனைந்து முளைப்பு கட்டி 10 லட்ச ரூபாய் வரை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே நெல் மூட்டைகளை மூடி பாதுகாப்பாக வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.