​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி பள்ளி மாணவர் உயிரிழப்பு

Published : Feb 11, 2019 3:16 PM



பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி பள்ளி மாணவர் உயிரிழப்பு

Feb 11, 2019 3:16 PM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசுப் பேருந்தின் படிகட்டில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவர், கீழே தவறி விழுந்ததால், பின்பக்க சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.காட்டாவூரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகன் தனசேகர், பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார்.

இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக பொன்னேரி நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க படிகட்டில் தொடங்கிய படி மாணவர் பயணித்துள்ளார். தேரடி சந்திப்பில் பேருந்து நின்று புறப்பட்ட போது, படிகட்டில் இருந்து தனசேகர் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் பள்ளி மாணவர் தனசேகர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.