​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தினேஷ் கார்த்திக் 1 ரன் ஓடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கக் கூடும் - ஹர்பஜன்

Published : Feb 11, 2019 3:10 PM

தினேஷ் கார்த்திக் 1 ரன் ஓடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கக் கூடும் - ஹர்பஜன்

Feb 11, 2019 3:10 PM

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தினேஷ் கார்த்திக் நடந்துகொண்ட விதம், சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி- 20 போட்டியில் இலக்கைத் துரத்தி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, கடைசி 4 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது டிம் சவுதி வீசிய பந்தை லாங்- ஆன் திசையை நோக்கி அடித்த தினேஷ் கார்த்திக், ரன் ஓட மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து கூறியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், எதிர்முனையில் க்ருனால் பாண்ட்யா சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்ததால், கார்த்திக் ஒரு ரன் ஓடி, க்ருனால் பாண்ட்யாவை பேட் செய்யச் சொல்லியிருந்தால் இந்திய அணி ஒருவேளை வெற்றிபெற்றிருந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.