​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க ஆதரவுப் படைகள் - IS தீவிரவாதிகள் கடும் மோதல்

Published : Feb 11, 2019 2:40 PM

அமெரிக்க ஆதரவுப் படைகள் - IS தீவிரவாதிகள் கடும் மோதல்

Feb 11, 2019 2:40 PM

சிரியாவில் அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.

தொடர் மோதலில் தீவிரவாதிகளிடமிருந்து பெரும்பாலான இடங்கள் கைப்பற்றபப்ட்ட நிலையில் யூப்ரடீஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த டிசம்பரில் இருந்து தீவிரவாதிகளின் மனைவிகள் குழந்தைகள் எனக் கூறப்படும் சுமார் 37 ஆயிரம் பேர் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்று விட்ட நிலையில் சுமார் 600 தீவிரவாதிகள் இந்த 4 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பகுதியிலும் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒடுக்க இறுதிக்கட்டப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கப் படைகள் ஆதரவுடன் அரசுப் படைகள் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வரும் நிலையில் கடும் போர் நடைபெற்று வருகிறது.