​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார் பிரியங்கா காந்தி

Published : Feb 11, 2019 2:34 PM

டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார் பிரியங்கா காந்தி

Feb 11, 2019 2:34 PM

பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கினைத் தொடங்கியுள்ளார்.

அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பதவியேற்றுக் கொண்டவருமான பிரியங்கா காந்தியும், அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்தக் கணக்கைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் அண்மையில் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.