​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா

Published : Feb 11, 2019 12:56 PM

குதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா

Feb 11, 2019 12:56 PM

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற குதிரை பேரம் பேசியது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. நாகனகவுடாவை ((Naganagouda Kandakur)) பாஜகவுக்கு இழுக்க அவரது மகன் சரணகவுடாவிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்றை முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார். ஆனால் அதில் இருப்பது தம்முடைய குரல் அல்ல என்றும், யாரையும் தாம் சந்திக்கவில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது, ஆடியோவில் இருப்பது தம்முடைய குரல் தான் என்றும், ஆனால் அந்த ஆடியோவை, குமாரசாமி தனது வசதிக்கேற்ப மாற்றியுள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் சரணகவுடாவை சந்தித்ததையும் எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்