​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வி.சி. கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகி வெட்டிக்கொலை

Published : Feb 11, 2019 12:51 PM

வி.சி. கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகி வெட்டிக்கொலை

Feb 11, 2019 12:51 PM

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

காலை அவர் வீட்டருகே இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.