​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

Published : Feb 11, 2019 11:43 AM

அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

Feb 11, 2019 11:43 AM

பேருந்திற்குள்ளேயே ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால், ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிவந்தார்.

நேற்றிரவு திருப்பத்தூரிலிருந்து சென்னை நோக்கி பேருந்தை இயக்கிவந்த அவருக்கு, அதிகாலையில் பூந்தமல்லி சாலையில் நெற்குன்றம் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.நெஞ்சு வலியையும் பொறுத்துக் கொண்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் சாய்ந்துள்ளார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவர் சென்னை கே.எம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஓட்டுநர் ரமேஷ் இறந்துவிட்ட செய்தியை தெரிவித்தனர்.