​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரசவ வலியால் நடுச்சாலையில் படுத்த பசுவைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்த போலீசார்

Published : Feb 11, 2019 7:26 AM

பிரசவ வலியால் நடுச்சாலையில் படுத்த பசுவைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்த போலீசார்

Feb 11, 2019 7:26 AM

சென்னை மயிலாப்பூரில், சாலையில் பிரசவ வலியால் துடித்த பசுவிற்கு காவலர்களும், பொதுமக்களும் இணைந்து பிரசவம் பார்க்க முயற்சித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நேற்றிரவு நடந்து சென்ற கர்ப்பிணிப் பசு ஒன்று பிரசவ வலி காரணமாக போக்குவரத்து மிகுந்த சாலையில் திடீரென படுத்தது. இதனைக் கண்ட அருகில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் இணைந்து போக்குவரத்தை சரி செய்து பசுவைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர்.

காவலர்களின் செயலைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் சிலரும் அவர்களுடன் இணைந்து, பசுவுக்கு கோதுமை தவிடு கலந்த கழனி, தண்ணீர் மற்றும் வைக்கோல் ஆகியவற்றைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர் வெகுநேரம் போராடியும் அவர்களால் பசுவுக்கு பிரசவம் பார்க்க இயலவில்லை. தகவலறிந்துவந்த பசுவின் உரிமையாளரை அங்கிருந்தவர்கள் திட்டித் தீர்த்தனர்.

புளுகிராஸ் அமைப்புக்கு போலீசார் தகவல் கொடுத்ததன் பேரில், அந்த அமைப்பினர் வாகனத்துடன் வந்து பசுவை அழைத்துச் சென்றனர்.