​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள்

Published : Feb 11, 2019 6:51 AM

வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள்

Feb 11, 2019 6:51 AM

சென்னை விமான நிலையத்திற்கு வந்த வைகோவுக்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை கோவையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபின் புறப்பட்டுச் சென்றார். ஆனால் விமானநிலையத்திற்கு வந்திருந்த பாஜக தொண்டர்கள் கலையாமல் இருந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, அங்கு குழுமியிருந்த பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே என்று தொடர்ந்து முழக்கம் எழுப்பியபடி இருந்தனர்.  தொடர்ந்து போலீசார் கோஷம் எழுப்பியவர்களை அப்புறப்படுத்தினர்.